முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி.யில் 2 ஆண்டுகளுக்கு பின் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் : பக்தர்கள் வெள்ளத்தால் குலுங்கிய கோதை நகர்

திங்கட்கிழமை, 1 ஆகஸ்ட் 2022      ஆன்மிகம்
Andal 2022 07 25

Source: provided

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழக அமைச்சர்கள் அரசு துறை உயர் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வெள்ளத்தால் கோதை நகர் குலுங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் முக்கியமானது ஆகும் . பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக பக்தி சிறப்புமிக்க இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் அவத ரித்த ஆடிப்பூரத்தன்று திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி வழங்குவது வழக்கம். அப்பொழுது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஜாதி, மத வேறுபாடு மறந்து திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து நிலையம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். 

இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. ஐந்தாம் திருநாள் கருட சேவையும் ஏழாம் திருநாள் ஆண்டாள் ரங்க மன்னார் சயன சேவை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று 1ம் தேதி காலை 9.05 துவங்கியது. முன்னதாக ஆண்டாள் ரங்கமன்னாருக்கு திருமஞ்சனம் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. அதிகாலை 3.30மணி அளவில் ஆண்டாள் ரங்க மன்னார் தம்பதிகள் தோ ளுக்கினியான் வாகனத்தில் புறப்பாடாகி தேரை அடைந்தனர். அப்போது அதிகாலை வேளையில் ஏராளமான பக்தர்கள் ஆண்டாள் ரங்க மன்னாரை வழிபட்டனர். அங்கு கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாரி முத்து பட்டர் பாலாஜி பட்டர் ஸ்டானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் வேதபிரான் சுதர்சன் கோவில் மணியம் கோபி ஆகியோர் பூஜைகள் மற்றும் ஆகம நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தனர். 

சரியாக காலை 9.05 மணிக்கு திரு தேரோட்டம் சிறப்பாக துவங்கியது தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கோவில் தக்கார் ரவிச்சந்திரன் மதுரை அற நிலையத் துறை இணை ஆணையர் செல்லத்துரை விருதுநகர் உதவி ஆணையர் வளர்மதி மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். அப்பொழுது பக்தர்கள் உற்சாகமாக கோபாலா கோவிந்தா என கோஷம் முழங்க திருத்தேர் நான்கு ரத வீதி வழியே இழுத்து வரப்பட்டு பிற்பகல் 12 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. 

தேரினை ஆன்மீக சொற்பொழிவாளர் ராஜாராம் புலவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வர்ணனை செய்து வழி நடத்திச் சென்றனர். தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அன்னதானம் பேருந்து மருத்துவம் குடிநீர் கழிப்பிட வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. தேரோட்டம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டாள் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

தேரோட்ட விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி தாரணி ஸ்ரீவில்லிபுத்தூர் சிறார் பாலியல் குற்ற தடுப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த், மாவட்ட மருத்துவத்துறை இயக்குனர் முருகவேல் , சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கப்பாண்டியன் சீனிவாசன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மல்லி கு ஆறுமுகம் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, ரங்கராஜ் பாண்டே, மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் ஜவகர் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சத்ய நாராயணன் திருத்தங்கள்  திரு நின்ற நாராயண பெருமாள் கோவில் செயல் அலுவலர் தேவி விருதுநகர் சுவாமி கோவில் செயல் அலுவலர் லட்சுமணன் அறநிலையத்துறை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆய்வாளர்கள் முத்துப்பாண்டி, மணிகண்டன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவகுமார் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட எஸ்பி மனோகரன் தலைமையில்  3 ஏ.டி.எஸ். பிக்கள் ஆறு டி.எஸ். பிக்கள் 19 இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் பெண் போலீசார் ஊர் காவல் படையினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் மதுரை அற நிலைய துறை இணை ஆணையர் செல்லதுரை கோவில் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் திரு கோவில் அலுவலர்களும்  பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து