முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு ரூ. 4335.53 கோடி ராணுவ நிதியுதவி: அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2022      உலகம்
USA 2022-08-03

Source: provided

வாஷிங்டன் : போரால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனுக்கு ரூ. 4335.53 கோடி ராணுவ நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது

நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா படையெடுத்து உள்ளது. போரானது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி 5 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 

போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ தளவாடங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு ரூ. 4335.53 கோடி ராணுவ நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் அறிவித்து உள்ளார்.

உக்ரைனின் சுய பாதுகாப்பிற்காக 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் 17-வது நிதியுதவிக்கு அதிபர் பைடன் ஒப்புதலுடன், இதனை அங்கீகரிக்கிறேன் என பிளிங்கன் தெரிவித்து உள்ளார். 

இதன்படி, அதிக செயல்திறன் கொண்ட ராக்கெட் சாதனங்கள் மற்றும் பீரங்கி சாதனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களை, உக்ரைன் போரில் பயன்படுத்தி கொள்ள வழங்குகிறோம் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார். 

அதிபர் பைடன் பொறுப்பேற்றது முதல், இதுவரை மொத்தம் உக்ரைனுக்கு ரூ. 68 ஆயிரத்து 580 கோடி மதிப்பில் ராணுவ உதவி வழங்கப்பட்டு உள்ளது என்றும் பிளிங்கன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து