முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் அவசரநிலை மேலும் 6 மாதம் நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2022      உலகம்
Myanmar 2022-08-03

Source: provided

பாங்காக் : மியான்மரில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை மேலும் 6 மாதம் நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது. 

மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் முறைகேடுகளினால் ஆங் சாங் சூகி தலைமையிலான ஜனநாயக தேசிய கட்சி வெற்றி பெற்றதாக கூறி, கடந்தாண்டு பிப்ரவரியில் ராணுவம் ஆட்சியை கலைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

இதைத் தொடர்ந்து, ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றிய ஜெனரல் மின் ஆங் லைங், ஓராண்டு அவசரநிலை பிறப்பித்தார். இந்நிலையில், அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில்,  நாட்டில் அமைதி திரும்பவும், ஜனநாயக அமைப்பை உருவாக்கவும், பொதுத் தேர்தல் நடத்தவும் கால அவகாசம் தேவைப்படுவதால், அவசரநிலை மேலும் 6 மாதம் நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அங்கு அவசரநிலை நீட்டிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து