முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு தானியத்தை ஏற்றிக் கொண்டு உக்ரைனில் இருந்து லெபனானுக்கு புறப்பட்டு சென்ற சரக்கு கப்பல்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2022      உலகம்
Ukrainian-ship 2022-08-03

Source: provided

அங்காரா : ரஷ்யா போர் தொடுத்த ஐந்தரை மாதங்களுக்குப் பின், உக்ரைனில் இருந்து முதன் முறையாக சரக்கு கப்பல் லெபனான் நோக்கி புறப்பட்டது.

கடந்த பிப்ரவரியில் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அது முதல், உக்ரைன் அருகே உள்ள கருங்கடலில் சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் உக்ரைனில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போரால், உலகளவில் உணவு தானியங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, ஐ.நா. கவலை தெரிவித்திருந்தது.

இதற்கிடையே துருக்கியில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஐ.நா., அமைப்பினர் சந்தித்து பேசினர். அப்போது, போர்க் காலத்திலும், 2,200 கோடி கிலோ உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய, ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து, 2.60 கோடி கிலோ சோளத்தை ஏற்றிக் கொண்டு சரக்கு கப்பல் ஒன்று மேற்காசிய நாடான லெபனானுக்கு புறப்பட்டது. அடுத்து, 16 சரக்கு கப்பல்கள் உக்ரைனில் இருந்து பல நாடுகளுக்குச் செல்ல உள்ளன.

அது போல ரஷ்ய சரக்கு கப்பலும் உணவு தானியங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், உக்ரைன், ரஷ்யா நாடுகளின் பொருளாதார பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து