முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவானை அமெரிக்கா கைவிடாது: நான்சி பொலேசி திட்டவட்டம்

புதன்கிழமை, 3 ஆகஸ்ட் 2022      உலகம்
Nancy-Polesi 2022-08-03

Source: provided

தைபே : தைவானை அமெரிக்கா கைவிடாது என நான்சி பொலேசி தெரிவித்துள்ளார். 

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி அரசு முறை பயணமாக தைவான் சென்றுள்ளார். தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என கூறி வரும் சீனா நான்சியின் இந்த பயணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நான்சியின் இந்த பயணத்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், நான்சி பொலேசி தைவான் அதிபர் டிசைங்க் வென்னை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் நான்சி பொலேசி கூறுகையில், 

உலகம் தற்போது ஜனநாயகம், சர்வாதிகாரம் ஆகிய இரண்டில் எதேனும் ஒன்றை தேர்தெடுக்கும் சூழ்நிலையில் உள்ளது. தைவானிலும், உலகின் பிற நாடுகளிலும் ஜனநாயகத்தை அமெரிக்கா இரும்புக்கரம் கொண்டு பாதுகாக்க உறுதியாக உள்ளது.

தைவானை அமெரிக்கா கைவிட்டு விடாது. என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த வருகை தைவானை அமெரிக்கா கைவிடாது என்பதை வெளிப்படுத்தும் செயல் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து