முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை ; அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளின் அருகாமையிலேயே சிகிச்சை பெறுவதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அற்புதமான திட்டம் தான் அம்மா மினி கிளினிக். இந்த திட்டம் மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றது. 

கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்கப்படாத காலத்தில், தனியார் ஆஸ்பத்திரிகள் பல இயங்காத நேரத்தில், அரசு டாக்டர்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து கொரோனாவுக்கும் மற்ற அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். அதே அரசு டாக்டர்கள் தான் இப்போதும் பணிபுரிகின்றனர் ஆனால் தற்போது, அரசு ஆஸ்பத்திரிகளுக்கே மக்கள் செல்ல அஞ்சும் நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து