முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 

மூத்த தமிழினத்தின் முத்தான தனிநிகர் தலைவரே, உங்கள் நினைவுநாள் இன்று. உங்களை நாங்கள் மறந்த நாள் என்று? நிழலாய் இருந்து வழிநடத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற மனத் துணிச்சலோடுதான் கட்சியையும் ஆட்சியையும் என் தோளில் சுமந்து கொண்டிருக்கிறேன். உங்கள் விழியின் ஒளியில் பயணத்தைத் தொடர்கிறோம்.

உங்கள் வழியில் எங்கள் கால்கள் செல்கின்றன. உடன்பிறப்பே என்ற உயிர்ச்சொல்லில் நாங்கள் உயிர் வாழ்கிறோம். கலைஞரே வாழ்க. தலைவரே வாழ்த்துக. இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து