முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

70 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட 2-ம் உலகப் போர் வெடிகுண்டு : இத்தாலியில் செயல் இழக்கப்பட்டது

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      உலகம்
Italy 2022-08-08

Source: provided

இத்தாலி : இரண்டாம் உலகப்போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகியும் தற்போதும் அதன் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளால் இன்றும் மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில், இத்தாலியில் 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இத்தாலியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள 'போ' ஆறு 70 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டுள்ளது.

இதனால் போர்கோ, வெர்ஜிலியோ பகுதியில் 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 1000 பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டு ஆற்றில் இருப்பதை கடந்த மாதம் 25-ம் தேதி மீனவர் ஒருவர் கண்டுபிடித்தார். இதனையடுத்து வெடிகுண்டை மீட்ட அந்நாட்டு இராணுவம் மெட்டோல் பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வெடிக்க வைத்து அகற்றினர்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து நீண்டகாலம் கடந்தும் ஒவ்வோரு நாடுகளில் வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து