முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - கத்திப்பாரா விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை - கத்திப்பாரா விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 7-8-2022 அன்று பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, ஜி.எஸ்.டி சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச் செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை சாலையில் சாய்ந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முக சுந்தரம் என்பவர் பலத்த காயமுற்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதோடு, போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், ஆகமொத்தம் மூன்று லட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்நிதியினை நேரில் சென்று வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து