முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் செயலருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை: டெல்லி கோர்ட்டு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      இந்தியா
Nilakkari 2022-08-08

நிலக்கரி ஊழல் வழக்கில் நிலக்கரி துறை முன்னாள் செயலாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மாராட்டிய மாநிலத்தில் கிழக்கு லோஹாரா நிலக்கரி தொகுதியை முறைகேடாக ஒதுக்கீடு செய்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சிபிஐயின் கூற்றுப்படி, 2005 மற்றும் 2011 க்கு இடையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், கிரிமினல் சதித்திட்டம் தீட்டி அரசை ஏமாற்றியுள்ளனர்.

கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஜிஐஎல்) நிறுவனத்தின் இயக்குனர் அந்நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.120 கோடி என்றும் கூறியுள்ளார். ஆனால் அதன் சொந்த நிகர மதிப்பு ரூ.3.3 கோடி மட்டுமே என்று சிபிஐ விசாரணையில் கூறியுள்ளது. இதனையடுத்து, ஆகஸ்ட் 25, 2014 அன்று சுப்ரீம் கோர்ட், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்தது.

இந்த நிறுவனத்துக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட, நிலக்கரி துறையில் செயலாளர் ஆக இருந்த எச் சி குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அபராதமாக ரூ.1 லட்சம் விதிக்கப்பட்டது. அவருடன் சேர்த்து முன்னாள் இணை- செயலாளர் கே எஸ் குரோபாவுக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அபராதமாக ரூ.50 ஆயிரம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஜிஐஎல்) நிறுவனத்தின் இயக்குனர் முகேஷ் குப்தாவுக்கு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அபராதமாக ரூ.2 லட்சம் விதிக்கப்பட்டது. அந்த நிறுவனம் தனியாக அபராதமாக ரூ.2 லட்சம் செலுத்தவும் டெல்லி கோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் எச் சி குப்தா மற்ற மூன்று நிலக்கரி ஊழல் வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார், மேலும் அந்த தண்டனைகளுக்கு எதிரான அவரது மேல்முறையீடு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தண்டனை பெற்ற மற்ற நபர்களுடன் சேர்ந்து தற்போது அவரும் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து