முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 25-ம் தேதி ஈரோடு வருகை

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

ஈரோடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 25-ந் தேதி வருகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 25-ந் தேதி வருகிறார். அன்று மாலை 5 மணியளவில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமாநல்லூர், குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர், மொடச்சூர், கோபி, நஞ்சகவுண்டன் பாளையம் வழியாக டி. என். பாளையம் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டிக்கு வருகிறார்.

அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் உள்ள காளிங்கராயன் அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

பின்னர் மறுநாள் 26-ந் தேதி காலை காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பி சோலார் அருகே உள்ள புதிய பஸ் நிலையம் அமைந்துள்ள திடலுக்கு செல்கிறார். அங்கு அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் மதியம் ஈரோடு காளிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து உணவு அருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் வழியாக கோவைக்கு செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து