முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

44-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் பி அணியில் திவ்யா தேஷ்முக் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Divya 2022-08-09

Source: provided

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்றான 11 ஆம் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. 

இதில் இந்திய மகளிர் பி அணியில் விளையாடிய திவ்யா தேஷ்முக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்லோவாகியா நாட்டு வீராங்கனையை 33-வது நகர்த்தலில் வீழ்த்தி திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றார். அதைபோல இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய பிரத்யுஷா போடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட கஜகஸ்தான் வீராங்கனையை 41-வது நகர்த்தலில் வீழ்த்தி பிரத்யுஷா வெற்றி பெற்றுள்ளார்.

____________

கடைசி சுற்றில் டிரா செய்தார் தமிழக வீராங்கனை வைஷாலி

இந்திய ஏ மகளிர் அணி தனது கடைசி சுற்றில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி தனது கடைசி ஆட்டத்தில் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் கிருஷ் ஐரினாவை எதிர்கொண்டார். 44-வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்ய இருவரும் ஒப்புக்கொண்டார்கள்.

சென்னை செஸ் ஒலிம்பியாடில் விளையாடிய 11 ஆட்டங்களில் 5 வெற்றி, ஒரு தோல்வி, 5 டிரா என நன்றாக விளையாடி இந்திய ஏ அணியின் முக்கிய வீராங்கனையாக உள்ளார் வைஷாலி. மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து