முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசி மற்றும் சுகாதார நெருக்கடி: காபூலில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      உலகம்
Afghan 2022-08-10

Source: provided

காபூல் : தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் காபூல் நகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வீடு இருந்த போதும் போதிய பணம் இல்லாததால், நாங்கள் ஒரே கூடாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்று பிச்சைகாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மையான பிச்சைக்காரர்களை கண்டறிந்து, அவர்கள் பிச்சை எடுப்பதை நிறுத்தவும் அவர்களுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆப்கான் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

பசி மற்றும் சுகாதார நெருக்கடி நிலை ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குனர் ஜான் சிப்டன் தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுவதாகவும் அவர் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து