முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதோரும் தயாரிக்கலாம் : கேரள அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      ஆன்மிகம்
Sabarimala 2022-08-10

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான டெண்டரில் இருந்த சாதி நிபந்தனைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வாபஸ் பெற்றுள்ளது. 

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கேரள அரசிற்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் புகார்கள் அனுப்பப்பட்டன. 

இதனையடுத்து, சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, 2001-ம் ஆண்டிலேயே விளம்பரங்களில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக்கூடாது என்று மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்திருந்தாலும், அது பின்பற்றப்படவில்லை;

தற்போது, நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்த சாதியவாத நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து