முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்கையா நாயுடுவுக்கு அன்புமணி வாழ்த்து

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Venkaiah-Naidu 2022-08-10

Source: provided

சென்னை : துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெறும் வெங்கையா நாயுடுவுக்கு அன்புமணி வாழ்த்து கூறியுள்ளார். 

இது குறித்து பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் வெங்கையா நாயுடுவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பா.ம.க. தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

துணை ஜனாதிபதியாக மிகச்சிறந்த முறையில் பணியாற்றி, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்த சந்திப்பின்போது வெங்கையா நாயுடுவுக்கு டாக்டர் அன்புமணி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து