முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு காரணம் தி.மு.க. : சசிகலா குற்றச்சாட்டு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Sasikala 2022-08-10

Source: provided

சென்னை : அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு தி.மு.க. தான் காரணம் என சசிகலா கூறினார்.

அ.தி.மு.க.வில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓபிஎஸ் ஒரு பிரிவாகவும், ஈபிஎஸ் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.யான மாய தேவர் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். வி.கே.சசிகலாவும் அஞ்சலி செலுத்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- பொறுத்திருந்து பாருங்கள். அனைவரையும் ஒன்றிணைப்பேன். அ.தி.மு.க.வை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்றார். தொடர்ந்து சசிகலாவிடம், பா.ஜ.க.வின் அழுத்தம்தான் அ.தி.மு.க.வின் பிளவிற்கு காரணமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 40 வருடமாக அ.தி.மு.க.வில் இருந்துள்ளேன். எல்லா அரசியல் சூழல்நிலைகளையும் பார்த்துள்ளேன்; இதன் பின்னணியில் தி.மு.க. இருப்பதாக கருதுகிறேன். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு தி.மு.க.தான் காரணம். தி.மு.க.தான் பின்னால் இருந்து செயல்படுகிறது. அ.தி.மு.க.வின் பிளவுக்கு மத்திய அரசு காரண இல்லை என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து