முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

புதுடெல்லி : மாநிலங்களுக்கு இரண்டு தவணை வரி பகிர்வாக 1.16 லட்சம் கோடி மத்திய அரசு விடுவித்திருக்கிறது. குறிப்பாக, இதில் தமிழகத்தில் ரூபாய் 4,758 கோடி விடுவித்திருக்கிறது. 

பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வு தொகையாக இந்த மாதம் இரண்டு தவணையும் சேர்த்து ஒரே தவணையாக ரூபாய் 1.16 கோடியை மத்திய அரசு விடுவித்திருக்கிறது. வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூபாய் 58,332 கோடி நிதி விடுவிக்கப்படும். ஆனால், இந்த மாதம் இரண்டு மாத தவணைகளையும் சேர்த்து ஒரே தவணையாக மத்திய அரசு சுமார் 1.16 கோடி ரூபாய் விடுவித்திருக்கிறது.

குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு வரி பணம் அளிக்கப்பட வேண்டும் என்று நிதிகுழு ஒரு பரிந்துரை வழங்குகிறது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரி பகிர்வானது மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு இரண்டு தவணைகளையும் சேர்த்து 4,758 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்திருக்கிறது. 

குறிப்பாக, மாநிலங்கள் தங்களுடைய முதலீட்டு மற்றும் இதர செலவினங்களை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக, மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்கிற மத்திய அரசின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு தவணையை ஒரு தவணையாக மத்திய அரசு  விடுவித்தது.       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து