முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்தது கராச்சி

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      உலகம்
Karachi-2022 08 11

பாகிஸ்தானின் கராச்சி நகரம் உலகின் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 

உலகில் வாழ்வதற்கு மோசமான நகரங்கள் பட்டியல் குறித்து பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு நடப்பாண்டில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்த பட்டியிலில் பாகிஸ்தானின் கராச்சி நகரம் இடம் பிடித்துள்ளது. 

உள்கட்டமைப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட ஐந்து காரணிகளின் அடிப்படையில் 172 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மோசமான வாழ்க்கை நிலை, திருட்டு, கடத்தல், போதைப்பொருள், வன்முறை மற்றும் மோசமான சமூக மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் உலக அளவில் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் கராச்சி நகரம் இடம் பிடித்துள்ளது. உலகில் வாழ்வதற்கான முதல் 10 இடங்களின் பட்டியலில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து