முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு எடப்பாடி வேண்டுகோள்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் போதைபொருள் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர்களிடமும், காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் முதல்வர்  தீவிர ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன.

கஞ்சா மற்றும் போதைப் பொருட்களினால் இளைஞர் சமுதாயம் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரும் தான்.  எனவே, பெற்றோர்கள்  எப்போதும் தங்கள் குழந்தைகளின் மேல் முழு கவனத்தை செலுத்தும்படியும், தவறான பாதைக்கு அவர்களைச் செல்லவிடாமல் கண்காணிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

காவல் துறையினர் தினசரி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பிடிப்பதாகவும், கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதாகவும், கடத்திய ஆசாமிகளைக் கைது செய்வதாகவும் செய்திகள் வருகின்றன.  இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை கையாண்டு,

தமிழகத்தில் இருந்து போதைப்பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து