முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி தியாகிகளுக்கு நன்றி செலுத்துவோம் : ரஜினிகாந்த் வேண்டுகோள்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      சினிமா
Rajini 2022-08-13

Source: provided

சென்னை : நாடு இல்லாவிட்டால் நாம் இல்லை. நம் வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நன்றி செலுத்துவோம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், '

இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு. நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் எல்லோரின் ஒற்றுமையை காட்டும் விதமாக, நம் இந்திய நாடு சுதந்திரம் அடைய எத்தனையோ வருடங்கள், பல லட்சம் பேர் சித்ரவதை அனுபவித்துள்ளனர்.

எத்தனையோ பேர் உயிரை தியாகம் செய்துள்ளனர். அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 15-ம் தேதி சாதி, மத, கட்சி வேறுபாடில்லாமல், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் 2 அடி அல்லது 3 அடி கொம்புகளில் தேசியக் கொடியைக் கட்டி நம் வருங்கால சந்ததியினரான குழந்தைகள், இளைஞர்கள் கையில் நம் வீடுகளின் முன்னால் கொடியை பறக்கவிட்டு பெருமைப்படுவோம். நாடு இல்லாவிட்டால் நாம் இல்லை. நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து