முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலால் அதிர்ச்சியடைந்தேன்: ஜோ பைடன்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      உலகம்
Joe-Biden 2022-08-14

Source: provided

வாஷிங்டன் ; சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதலால் அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி பேசிக் கொண்டிருந்த போது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இதில் படுகாயமடைந்த சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய 24 வயதான ஹடி மடர் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதலால் தானும், தன் மனைவியும் அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதல் குறித்து அறிந்த நானும் என் மனைவியும் மிகுந்த அதிர்ச்சியும், கவலையும் அடைந்தோம். சல்மான் ருஷ்டி உடல்நலம் பெற அனைத்து அமெரிக்க மக்களும், உலகம் முழுவதும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து