முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்த நாளன்று சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசார்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      உலகம்
Dubai-Police 2022-08-14

Source: provided

துபாய் : பிறந்த நாளன்று சிறுமியின் ஆசையை துபாய் போலீசார் நிறைவேற்றி உள்ளனர். 

துபாய் நகரில் ஹூத் ஹத்தாத் என்ற அரபு நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். அவர் தனது பிறந்த நாள் அன்று போலீஸ் அதிகாரியாக வேண்டும் என பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தார். இதனையடுத்து அவர்களின் பெற்றோர் தங்களது மகளின் விருப்பத்தை எவ்வாறு நிறைவேற்றுவது? என நினைத்து வந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் போலீஸ் தலைமையகத்துக்கு தனது மகளின் விருப்பத்தை இ-மெயில் மூலம் அனுப்பினர். 

இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள் சிறுமியின் பிறந்த நாள் ஆசையை நிறைவேற்ற உறுதியளித்தனர். இதையடுத்து சிறுமியின் பிறந்த நாளான நேற்று முன்தினம் போலீஸ் அலுவலகத்துக்கு சீருடையில் வந்தார். அவரை போலீஸ் அதிகாரிகள் வரவேற்று பூங்கொத்து வழங்கினர். மேலும் பிறந்த நாளையொட்டி சிறுமிக்கு பரிசு அளித்து மகிழ்ச்சிபடுத்தினர். பின்னர் போலீஸ் அதிகாரி இருக்கையில் அமர வைத்தனர். அப்போது போலீஸ் துறையில் உள்ள பல்வேறு வகையான பணிகள் குறித்தும் சிறுமிக்கு தெரிவித்தனர். 

மேலும் போலீஸ் அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியினையும் அழைத்து சென்று காண்பித்தனர். தொடர்ந்து சிறுமி போலீசார் பயன்படுத்தும் சொகுசு ரோந்து காரில் அழைத்துச் செல்லப்பட்டார். நகரின் சில பகுதிகளுக்கு ரோந்து காரில் வலம் வந்தார். இதன் காரணமாக சிறுமி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தனது பிறந்த நாள் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசாருக்கு அந்த சிறுமியும், அவரது பெற்றோரும் நன்றி தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து