முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நடிகையாக ஆசைப்பட்டு 15 இடங்களில் சர்ஜரி செய்த தென்கொரிய இளம்பெண்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      உலகம்
Cherry-Lee 2022-08-14

Source: provided

சியோல் ; தென்கொரிய இளம்பெண் ஒருவர் பிரபல நடிகையாக ஆசைப்பட்டு, பல லட்சம் செலவிட்டு உடலில் 15 இடங்களில் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். 

தென்கொரியாவை சேர்ந்த இளம்பெண் செர்ரி லீ (வயது 28). உலகின் மிக அழகான பெண்ணாக தோற்றமளிக்கவேண்டும் என இவருக்கு விருப்பம். அதற்காக தன்னை உருமாற்றி கொள்ள விரும்பியுள்ளார். இதனால், பிரபல நடிகையான கிம் கர்தேசியனை பின்பற்றி உள்ளார். இதுபற்றி செர்ரி லீ கூறும்போது, 

கர்தேசியனை பார்த்து வளர்ந்தவள் நான். அவரை போலவே தோற்றமளிக்க வேண்டும் என விரும்பினேன். அவர் எப்போதும் எனக்கு ஓர் உந்துதலாக இருந்தவர். எனது பார்வைக்கு உலகின் மிக அழகிய பெண்மணியாக தெரிந்தவர் என கூறியுள்ளார். கிம் கர்தேசியன் மீது தீராத பற்று கொண்ட லீ தனது 20 வயதில் முதன்முறையாக தன்னை அழகுபடுத்தி கொள்ள அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இது 15-க்கும் மேற்பட்ட சர்ஜரியில் கொண்டு போய் அவரை விட்டுள்ளது. 

முகம், கண்கள், மார்பு, இடுப்பு மற்றும் பின்பகுதி என உடலின் பல இடங்களில் அவருக்கு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இதன்பின்னர் லீ கூறும்போது, நான் உண்மையில் முன்பிருந்ததற்கும், தற்போது இருப்பதற்கும் முற்றிலும் வேறுபட்ட நபராக காட்சியளிக்கிறேன். மேற்கத்திய பெண்ணாக தோன்றுகிறேன். எனது கொரிய குடும்பத்தினர் பலருக்கு என்னை அடையாளம் காணக்கூட முடியவில்லை என பெருமையுடன் கூறுகிறார். 

கடந்த 2010-ம் ஆண்டு இவரது காதலருடன் மனமுறிவு ஏற்பட்டு உள்ளது. அதேவேளையில், தனது உருமாற்ற முடிவையும் அவர் எடுத்துள்ளார். தனது தோற்றம் மாறிய பின்னர், உறவை புதுப்பித்து கொள்ள அவரது காதலர் முன்வந்துள்ளார். ஆனால், அதனை மறுத்து விட்டேன் என லீ கூறுகிறார். கிம் கர்தேசியன் போன்று தோற்றமளிக்க விரும்பிய பிரேசில் நாட்டு மாடல் அழகி ஒருவர், அதற்காக கடந்த 12 ஆண்டுகளாக ரூ. 4 கோடி வரை பணம் செலவிட்டு உள்ளார். இதனை சில வாரங்களுக்கு முன்பு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து