முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தினம்: 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம் : தமிழக அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியை பாராட்டி சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி,  சென்னை பெருநகர காவல், சட்டம் மற்றும் ஒழுங்கு (தெற்கு), கூடுதல் காவல் ஆணையாளர் பிரேம்ஆனந்த்சின்ஹா,  கடலூர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, காவல் ஆய்வாளர் அம்பேத்கார்,    சென்னை பெருநகர காவல், அடையாறு போக்குவரத்து காவல் நிலையம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவராமன்,  மதுரை மாநகரம், மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலையம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பழனியாண்டி, தாம்பரம் காவல் ஆணையரகம்,ஜே-10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமார் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. 

இதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,  மதுரை மாநகரம், தலைமையிடம், காவல்துறை துணை ஆணையாளர் ஸ்டாலின், சேலம் மாநகர் ஒருங்கிணைந்த குற்ற அலகு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன்,  விழுப்புரம் மாவட்டம், ரோஷனை காவல் வட்டம், காவல் ஆய்வாளர் பிருந்தா,  நாமக்கல் மாவட்டம். குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, காவல் ஆய்வாளர் பிரபா, சென்னை மாநகரக் காவல், ஆர்-2 கோடம்பாக்கம் காவல் நிலையம், காவல் ஆய்வாளர்  சீனிவாசன், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அனைத்து மகளிர் காவல் நிலையம்,  காவல் ஆய்வாளர் சுமதி,  நாகப்பட்டினம் மாவட்டம், கரியாப்பட்டினம் காவல் நிலையம், காவல் ஆய்வாளர் நாகலெட்சுமி,  சென்னை பெருநகர காவல், பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு, காவல் உதவி ஆய்வாளர்  துளசிதாஸ்,  சென்னை,ஒருங்கிணைந்த குற்ற அலகு - 1, குற்ற புலனாய்வு துறை, காவல் உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி,  சென்னை,அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் விருது பெறுகின்றனர்.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், தமிழக முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து