முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் ரம்மியை காலம் தாழ்த்தாமல் உடனே தடை செய்ய வேண்டும் : அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
RBU 2022-08-01

Source: provided

மதுரை : ஆன்லைன் ரம்மியை காலம் தாழ்த்தாமல் உடனே தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சித்துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.

ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை லாலா ராம் சவுத்ரி, மதன்சிங்ராஜ் புரோகித் ஆகியோர் ஏற்பாடு செய்தனர் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 28 அணிகள் பங்கேற்கிறது. இந்த போட்டியினை துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு தேசிய கொடியினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன், சவுராஷ்டிரா பள்ளி தாளாளர் ஜெகநாதன், மற்றும் நிர்வாகிகள் வெற்றிவேல் திருப்பதி உட்பட பல கலந்து கொண்டனர்.

பின்னர் எதிர்கட்சித்துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்  நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. தற்பொழுது 75 - வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெறும் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

பாரத பிரதமர் மோடிஜியின் வேண்டுகோளை ஏற்று எடப்பாடியார் ஆணைக்கிணங்க, இளைஞர்களுக்கு நாட்டுக்காக உழைத்த தியாகச் செம்மல்களின் நினைவை கூறும் வகையில் தேசியக்கொடி வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2011 ஆம் ஆண்டு, மாணவர்களின் நலன் கருதி அம்மா அவர்கள் மடிக்கணினி திட்டத்தை வழங்கினார்கள். அத்துடன் 14 வகை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதுவரை 55 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி அமைத்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில்  பணத்தை இழந்து 28 பேர்கள் தற்கொலை செய்து கொண்டனர் உள்ளனர். அவர்கள் குடும்பங்கள் நடுத்தெருவில் உள்ளது என்ற  கவலை அளிக்கும் சூழ்நிலை உள்ளது.

கடந்த சட்டமன்ற கூட்டதொடரில் கூட, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார்.அடுத்த தலைமுறையை காக்க அரசுக்கு பொறுப்பு உள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உரிய சட்டத்தை விரைவாக கொண்டு வர வேண்டும்.இன்னமும் குழு போடுகிற கருத்து கேட்கிற அரசாக திமுக அரசாக உள்ளது

இதற்கு எதற்கு கருத்துக்கள் கேட்க வேண்டும். இது நாடறிந்த சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் போடப்பட்டுள்ளது நடைமுறையில் கூட இருக்கிறது.தி.மு.க. அரசு நீதிமன்றத்தில் உரிய வாதங்களை முன்வைத்து வாதாட காரணத்தினால், அரசு பின் வாங்கியதால் தடை நீக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய காலம் தாழ்த்துதை பார்த்தால் இந்த அரசு அதற்கு உடந்தையாக உள்ளதா என்ற அச்சமும் ஐயமும் உள்ளது.

விமான நிலையத்தில் வீரம் மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்துவதில் அமைச்சர்கள், அரசு தரப்பினர் முன்னுரிமை கொடுத்து மரியாதை செய்வது மரபு.நிதியமைச்சரின் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி பா.ஜ.க. தொண்டர்களிடையே உணர்ச்சியை கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

நிதியமைச்சர் பேசும்பொழுது மரபு என்பதற்கு பதிலாக தகுதி என்று கூறிவிட்டார். இதில் வார்த்தை வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனை கடுஞ்சொல்லாக நினைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நாங்கள் எல்லாம் இரு தரப்பினையும் சமாதானப்படுத்தினோம்.

அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும் பொழுது விரும்பதகாத நிகழ்வு நடந்து விட்டது.பண்புமிக்க, கண்ணியமிக்க மதுரையில் இது போன்று நடைபெற்றதில்லை. துரதிருஷ்டவசமாக இந்தசம்பவம் நடைபெற்றுள்ளது.உணர்ச்சி கொந்தளிப்பில் விரும்பத்தகாத  வகையில் நடந்த சம்பவம்  வேதனையளிக்கிறது.கசப்பான நிகழ்வு இது.அந்த நிகழ்வால் மனம் வேததைப்பட்டதாக சரவணன்  தெரிவித்துள்ளார்.

மதுரையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது.மருத்துவர் சரவணன் வேதனையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து