முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருமன் விமர்சனம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      சினிமா
Veruman-Review 2022-08-15

Source: provided

கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் விருமன். கதை, அரசு அதிகாரியாக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு நான்கு மகன்கள். இவர்களில் கடைசி மகன் தான் கார்த்தி. தன்னுடைய அம்மா சரண்யாவின் மரணத்திற்கு அப்பா பிரகாஷ் தான் காரணம் என்பதால் தனது தந்தையை கொலை செய்யவேண்டும் என துடிக்கிறார் கார்த்தி. இதனையடுத்து தாய் மாமன் ராஜ்கிரண் கார்த்தியை அவருடைய தந்தையிடம் இருந்து தனியாக அழைத்து செல்கிறார். பல வருடங்கள் கழித்து மீண்டும் தனது தந்தையை சந்திக்கும் கார்த்தி அதே கோபத்துடன் இருக்கிறார். இன்னொரு பக்கம் ஆர்கே சுரேஷு மோதுகிறார். இறுதியில் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் கதை. நாயகன் கார்த்தி வழக்கம் போல வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அறிமுக நாயகி அதிதி சங்கர் கொடுத்த வேலையை சரியாக செய்து கொடுத்துள்ளார். பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பின் மூலம் அசத்துகிறார். ராஜ்கிரண். சரண்யா பொன்வண்ணன், வடிவுகரசியின் அனுபவ நடிப்பு கச்சிதம். சூரியின் நகைச்சுவை ஓகே.ஆகியுள்ளது. தேனி மாவட்டத்தின் அழகைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள், பின்னணி வழக்கம் மோல முத்தையா படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ இந்த படத்திலும் அப்படியே இருக்கிறது. மொத்தத்தில் விருமன் சுமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து