முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய சுதந்திர தினம்: அமெரிக்க அதிபர் ஜோபைடன் வாழ்த்து

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      உலகம்
Joe-Biden 2022 02 19

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோபைடன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 

ஏறக்குறைய 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், 75-வது ஆண்டு விடுதலை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகியவற்றின் உறுதியான செய்தியை வழிகாட்டியாக கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது என தெரிவித்துள்ளார். இந்திய அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கி உள்ளனர் என கூறியதுடன், இந்த ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 75-வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து