முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ்வேளூரை சேர்ந்த எழிலரசிக்கு வீரதீர செயலுக்கான விருது : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-9 2022-08-15

Source: provided

சென்னை : இந்த ஆண்டு வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நாகை கீழ்வேளூரை சேர்ந்த எழிலரசிக்கு வழங்கப்பட்டுள்ளது.  

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் பின்புறம் மேலவீதி அடுத்த கவுண்டர் தெருவில் அமைந்துள்ளது. சரியாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி காட்சியளிக்கும் இந்த குளத்தின் கரையில் அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு குழந்தை குளத்தில் உள்ள பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி குளத்தில் தவறி விழுந்தது. அதனைப் பார்த்த மற்றொரு குழந்தை அந்த குழந்தையை காப்பாற்ற முயன்றது. அப்போது அந்த குழந்தையும் குளத்தில் விழுந்தது. இரு குழந்தைகளும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். 

இதனை பார்த்த எழிலரசி என்பவர் உடனடியாக குளத்தில் இறங்கி இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முயன்று அவரும் குளத்தில் விழுந்தார். இருப்பினும் குழந்தைகளை பத்திரமாக மீட்டார். தனது உயிரை துச்சமென நினைத்து குழந்தைகளை காப்பாற்றிய எழிலரசியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித் தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நாகை கீழ்வேளூரை சேர்ந்த எழிலரசிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து