முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

75-வது சுதந்திர தினம்: சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-4 2022-08-15

Source: provided

சென்னை : நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசிய கொடியை  ஏற்றி சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். 

சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. காலை 8 மணி முதலே நிகழ்ச்சியில் பங்கேற்க எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு  மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். 

முன்னதாக, நேற்று காலை 8.35 மணிக்கு கோட்டை அருகில் வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலர் இறையன்பு வரவேற்று, காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். 

தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், பின்னர் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல் துறை அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்று இரண்டாவது முறையாக அவர் தேசியக் கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து, தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு வகையான விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கினார். விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்திருந்தனர். சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பழமைவாய்ந்த முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து