முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இன்று திருமா. மணிவிழா: முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் மணிவிழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். 

 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பியின் பிறந்த நாளை கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். நாளை  17-ம் தேதி அவருக்கு 60-வது பிறந்த நாளாகும். பிறந்த நாள் மணி விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், போன்றவை தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் மூலம் வழங்கப்படுகிறது. 

அதன் ஒரு பகுதியாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (16-ம் தேதி) மணிவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கவிப்பொழிவு, இசைப் பொழிவு, கருத்துப் பொழிவு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து இந்த விழாவில் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து