முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை காக்க ஐ.சி.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் வீரர் கபில் தேவ் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Kapil-Dev 2022-08-15

ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க  வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 

பென் ஸ்டோக்ஸ்...

டி20 கிரிக்கெட் வருகையால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அழிந்து வருகிறது.  சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா டி20 லீக் 2023 ஜனவரியில் தொடங்க இருக்கிறது. யுஏஈ டி20 லீக் 2023 ஜனவரியில் தொடங்க இருக்கிறது. 

நேரம் ஒதுக்க... 

இதைக்குறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது., ஒருநாள் போட்டிகள் அழிந்து வருவதாக நினைக்கிறேன். ஐசிசிக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இப்படியே போனால் 4 வருடத்திற்கு ஒருமுறை தான் விளையாட முடியும். அனைவரும் டி20 கிரிக்கெட் தொடரிலே பங்கேற்பதில் குறியாக உள்ளனர். ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐசிசிதான் அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். கிளப் கிரிக்கெட், ஐபிஎல், பிக் பேஷ் எல்லாம் சரி. தற்போது தென்னாப்பிரிக்க லீக், யுஏஈ லீக் வருகிறது. அனைத்து நாடுகளும் கிளப் கிரிக்கெட் விளையாடினால 4 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் உலக கோப்பையில் மட்டுமே விளையாட முடியும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து