முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பாதிப்பு பெருமளவு குறைந்தது: இந்தியாவில் 8,813 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      இந்தியா
India-Corona 2022 01 12

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. புதிதாக 8,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது முந்தைய நாள் பாதிப்பான 14 ஆயிரத்து 917-ஐ விட பெருமளவு குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 77 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 38 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 98 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 208 கோடியே 31 லட்சத்து 24 ஆயிரத்து 694 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து