முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழைக்கால நோய்த் தடுப்பு நடவடிக்கை: தேவையான மருந்துகளை இருப்பு வைக்க அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Ma Subramanian 2022 08 16

மருத்துவமனைகளில் மருந்துகள் தேவையான அளவு இருப்பு இருக்க வேண்டும் என்று மழைக்கால நோய் தடுப்புக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு குறித்து மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், " தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகைளை மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், தென்மேற்கு பருவமழைக் காரணமாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனை கருவிகள் ரத்த கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து