முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அடுத்த மாதம் சர்வதேச போட்டி: டென்னிஸ் மைதானத்தை புதுப்பிக்கும் பணி குறித்து அமைச்சர் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Meiyanathan 2022-08-16

சென்னையில் அடுத்தம் மாதம் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ள நிலையில், டென்னிஸ் மைதானத்தை புதுப்பிக்கும் பணி குறித்து அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னையில் அடுத்த மாதம் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் மைதானத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். மேலும் இந்தப் போட்டிகள் நடத்துவது தொடர்பான மாதிரிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " சர்வதேச தரத்தில் டென்னிஸ் மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் உள்ள விளக்குகள் ரூ.3 கோடி செலவில், சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்படவுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையும். வரும் செப்டம்பர் 8-ம் தேதியிலிருந்து மைதானத்தில் விளையாடலாம்.

அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தால், இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.500 கோடி செலவு செய்திருப்பார்கள். ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறும் ரூ.114 கோடியில், மிகவும் குறைவாக செலவு செய்துள்ளார். ஒரு ரூபாய் செலவு செய்து மூன்று ரூபாய்க்கான பணிகள் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் சர்வதேச அளவில் தமிழக முதல்வர் தான் ஒரு மிகசிறந்த நிர்வாகி என்பதை சாதித்து காட்டியிருக்கிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான அனைத்து பணிகளுமே, எவ்வளவு செலவு குறைவாக நடத்த முடியுமோ, அத்தனை குறைவாக செலவு செய்து நடத்தியுள்ளோம். செஸ் ஒலிம்பியாட் தொடர்பான செலவுகளை பொதுத் தளத்தில் வைக்கிறோம்.யார் வேண்டுமானாலும் வந்து விசாரித்துக் கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து