முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா புரடக்சன்ஸ் வெளியிடும் 3 புதிய படங்கள்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      சினிமா
Sasikala-Productions 2022-0

Source: provided

சினிமா தயாரிப்பு நிறுவனமான சசிகலா புரடக்சன்ஸின் துவக்கவிழாவும், இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா  நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள லாகின் ஆகிய படங்களின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில்  இதன் நிறுவனர் ஆண்டனி தாஸ் பேசுகையில்,எங்கள் நிறுவனம் சார்பில் பல தமிழ்ப்படங்களுக்கு நாங்கள் போஸ்ட் புரடக்சன்ஸ் வேலைகளை செய்து வருகிறோம். நான் பல படங்களை பார்த்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் பலர், நம் படத்தை வாங்குவார்களா?  நாம் ஜெயிப்போமா ?  என கனவுகளோடு இருக்கிறார்கள். சசிகலா புரடக்சன்ஸ்  அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். 2 மணி நேரம் ரசிகர்கனை மகிழ்விக்கும் அனைத்து படமும் பெரிய படம் தான். எங்கள் நிறுவனம் மூலம் அப்படிப்பட்ட நல்ல படைப்புகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு அளிப்போம். இந்த மூன்று படங்களை எப்படி வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்ற ரகசியம் தெரியும் இந்தப்படங்கள் கண்டிப்பாக வெற்றியை பெறும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து