முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆக. 22-ல் பட்ஜெட் தாக்கல்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Puducherry 2022-08-10

புதுச்சேரி சட்டசபையில் வருகிற 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி சட்டசபையில் கடந்த 10-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டமானது கவர்னர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. அதன் பின் கவர்னர் உரையை வாசித்ததையடுத்து பேரவை தலைவர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார்.

பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராததால் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின், கடந்த 12-ம் தேதி மத்திய அரசு புதுச்சேரியின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது. 2022-23-ம் நிதியாண்டிற்கு ரூ.11 ஆயிரம் கோடியில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு அனுப்பிய நிலையில், ரூ.10,696 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி சட்டசபையில் வருகிற 22-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்-மந்திரி ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து