முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 9,062 பேருக்கு தொற்று: இந்தியாவில் சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      இந்தியா
India-Corona 2022 03 15

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது முந்தைய நாள் பாதிப்பான 8 ஆயிரத்து 813-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 86 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து 15 ஆயிரத்து 220 பேர் குணமடைந்தனர். இதையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 54 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 208 கோடியே 57 லட்சத்து 15 ஆயிரத்து 251 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து