முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையாள புத்தாண்டை முன்னிட்டு சபரிமலை கோவிலில் சிறப்பு பூஜை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      இந்தியா
sabari-malai-----------2022-08-18

Source: provided

சபரிமலை: மலையாள புத்தாண்டை முன்னிட்டு சபரிமலை கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆவணி மாத பூஜை மற்றும் மலையாள புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் நடைபெற்றது. தந்திரி கண்டரரு ராஜீவரு ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

மலையாள புத்தாண்டு பிறப்பையொட்டி தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 21-ம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம், கலசாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும். 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். திருவோண பண்டிகைக்காக சபரிமலை நடை மீண்டும் செப்டம்பர் 6-ந் தேதி திறக்கப்பட்டு 10-ந் தேதி வரை சிறப்பு பூஜை நடைபெறும்.

முன்னதாக காலை 7.30 மணிக்கு உஷ பூஜைக்கு பிறகு சபரிமலைக்கான புதிய கீழ்சாந்தி நியமனத்திற்கான குலுக்கல் நடைபெற்றது. அதில் புதிய கீழ்சாந்தியாக வி.என். ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான கமிஷனர் பி.எஸ்.பிரகாஷ், தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், உறுப்பினர் மனோஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து