முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடக்கு அல்ஜீரியாவில் காட்டுத் தீக்கு 26 பேர் பலி 350 குடும்பங்கள் வெளியேற்றம்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      உலகம்
forest-fire-2022-08-18

Source: provided

அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், 350 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அல்ஜீரிய- துனிசியாவுக்கு அருகிலுள்ள எல் ட்ராப் எனும் பிரதேசத்தில் 24 பேரும் இறந்துள்ளனர். அவர்களில் 8 பேர் பொது பேருந்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது தீயில் கருகி உயிரிழந்தனர்.  மேலும், அல்ஜீரியாவுக்கு கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செட்டிப் பகுதியில் இரண்டு பேர் இறந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கமெல் பெல்ட்ஜவுட் தெரிவித்தார். 

காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 350 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு ஏற்பட்ட காட்டுத் தீயில் 33 ராணுவ வீரர்கள் உள்பட 104 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து