முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ஜெலன்ஸ்கி உறுதி

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      உலகம்
Jelanski 2022-08-19

படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக உக்ரைன் சென்ற அவர் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று முன்தினம் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர். 

இந்த விவகாரத்தில் துருக்கி மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக எர்டோகன் மீண்டும் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புடினுடன் தொடர்பில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை மேஜையில் போர் முடிவடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதற்கிடையில், உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் நேற்று முன்தினம் ஒரே இரவில் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து