முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஆண்டுகளுக்கு பிறகு மதுராவில் கோகுலாஷ்டமி கோலாகல கொண்டாட்டம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      இந்தியா
Modi 2022 07 29

உத்தர பிரதேசத்தில் கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக மதுரா திகழ்கிறது. இந்த நகரில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்ளது. இந்த ஆண்டு கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணர் பிறந்த தினமான நேற்று, கிருஷ்ணரின் சிலைகளுக்கு வண்ணமயமான புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் மதுராவில் உள்ள தையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விற்பனையாகி வருகின்றன.

இந்த உடைகளில் அதன் விலைக்கு ஏற்ற வகையில் ஜரிகை வேலைப்பாடுகளுடன் பிரகாசமான கற்களும் பதிக்கப்படுகின்றன. இதனால், இந்த உடைகள் ரூ.20 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, போலந்து, துபாய் உள்ளிட்ட 18 வெளிநாடுகளில் இருந்து மதுரா தையல் கலைஞர்கள் ஆர்டர் பெற்று வருகின்றனர். கிருஷ்ணரின் ஆடைகள் கடந்த 2 ஆண்டுகளாக விற்காமல் இருந்தன. தற்போது, கோகுலாஷ்டமி மிக சிறப்பாக கொண்டாடப்படுவதால், மதுரா தையல் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு மீண்டும் வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில், “இந்த ஆண்டு சுமார் ரூ.500 கோடிக்கு கிருஷ்ணர் ஆடைகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி உள்ளன. உலகிலேயே கிருஷ்ணருக்கு மட்டும்தான் அதிக வகைகளிலான ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இதன் பலன் கிருஷ்ண ஜென்ம பூமி வாசிகளான எங்களுக்கு கிடைத்து வருகிறது” என்றார்.

இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

ஜென்மாஷ்டமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய இந்த திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். வாழ்க ஸ்ரீ கிருஷ்ணா! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து