முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பது குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Silenthra-Babu 2022 01 02

Source: provided

சென்னை : தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக நேற்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போதை பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் போதை பொருள் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

இந்த நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினார். டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்கள், டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும்  இதன் மூலம் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும் என்று கூட்டத்தில் சைலேந்திரபாபு நம்பிக்கை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து