முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 11,539 பேருக்கு தொற்று

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2022      இந்தியா
India-Corona 2022 01 12

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக நேற்று 11,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,539 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று முன்தினம் பாதிப்பு 13,272 ஆக இருந்த நிலையில் நேற்று குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 39 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 12 ஆயிரத்து 218 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 99,879 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினத்தை விட 1,287 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 43 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிகை 5,27,332 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து