முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு கூடுதல் பஸ்கள்: ஆந்திர அரசு ஏற்பாடு

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2022      ஆன்மிகம்
Tirupati 2022 08-27

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதல் பஸ்களை இயக்க ஆந்திர அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 27-ம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழா பக்தர்களின்றி கோவிலுக்கு உள்ளேயே சாமி வீதி உலா நடந்தது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருட சேவை அன்று ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வருவதால் கூடுதலாக பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 300 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் பிரமோற்சவ விழாவில் சிரமமின்றி கலந்து கொள்வதற்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேலும் கூடுதலாக 40 பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. 

அதன்படி திருப்பதி, திருமலை, சித்தூர், காளஹஸ்தி, புத்தூர், கூடூர், வெங்கடகிரி உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 340 பஸ்கள் புதியதாக பெயிண்ட் அடித்து, என்ஜின்களில் பழுது நீக்கி புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து