முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. சபை தலைவருடன் இந்திய வெளியுறவு செயலர் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      இந்தியா
Abdullah-Shahid 2022-08-28

Source: provided

புதுடெல்லி :  இந்திய வெளியுறவுச்செயலர் வினய் மோகன் குவாத்ராவை மாலத்தீவுகள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் சந்தித்து பேசினார். 

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (யு.என்.ஜி.ஏ) தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இருந்து வருகிறார். இவர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ராவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தப்பட்டது. 

அரசு முறை பயணமாக வந்துள்ள மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார். பொதுச்சபையின் 76-வது அமர்வின் தலைவராக உள்ள அப்துல்லா ஷாஹித்தின் ஓராண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து