முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை குளிர்பானத்தை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர்: நடிகை சோனாலி மரண வழக்கில் சி.சி.டி.வி. ஆதாரம் வெளியீடு கிளப் உரிமையாளர் உட்பட மேலும் 2 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      இந்தியா
Sonali-Bogat 2022-08-28

Source: provided

 

பனாஜி நடிகை சோனாலி மரண வழக்கில் அவரது உதவியாளர் மற்றும் நண்பர் ஆகியோர் கட்டாயப்படுத்தி சோனாலியை குளிர்பானம் குடிக்க வைத்த சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன என்றும், மேலும் இது தொடர்பாக கிளப் உரிமையாளர், போதைப்பொருள் கடத்தல்காரராக சந்தேகிக்கப்படும் தத் பிரஷாத் கவுங்கர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் ஐ.ஜி ஓம்வீர் சிங் கூறியுள்ளார். 

அரியானாவை சேர்ந்த நடிகை சோனாலி போகட், கடந்த 23-ம் தேதி கோவாவுக்கு நண்பர்களுடன் சுற்றுப்பயணம் சென்றார்.  இந்நிலையில் அவர் வடக்கு கோவாவில் உள்ள அஞ்ஜுனாவில் உள்ள புனித அந்தோணி மருத்துவமனையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பலத்த காயம் இருந்ததைத் தொடர்ந்து கோவா போலீசார் கொலை வழக்காக அதைப் பதிவு செய்தனர். 

இது குறித்து கோவா போலீஸ் ஐ.ஜி ஓம்வீர் சிங் கூறும் போது, கிளப் ஒன்றில் நடிகை சோனாலி, அவரது உதவியாளர் சுதிர் சங்வான், அவரது நண்பர் சுக்விந்திர் சிங் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது சோனாலியை அவர்கள் கட்டாயப்படுத்தி குளிர்பானம் குடிக்க வைத்த சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன. அதில் போதைப்பொருள் கலந்து கொடுத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். இதனிடையே, சோனாலி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சோனாலி உடல் கடந்த வெள்ளியன்று ஹிசாரில் உள்ள அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளாமானோர் கலந்து கொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, இந்த வழக்கில் அஞ்ஜுனாவில் உள்ள கர்லீஸ் கிளப் உரிமையாளர், போதைப்பொருள் கடத்தல்காரராக சந்தேகிக்கப்படும் தத் பிரஷாத் கவுங்கர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே கைதான சுதிர் உள்ளிட்ட இருவருக்கும் நீதிமன்றம் 10 நாள் போலீஸ் காவல் வழங்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து