முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கு சுங்க கட்டண சலுகை : மகராஷ்டிர அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      ஆன்மிகம்
Ganesha-Chaturthi 2022 08-2

Source: provided

மும்பை : விநாயகர் சதுர்த்திக்கு கொங்கன் பகுதியில் உள்ள சொந்த ஊருக்கு செல்வோருக்கு வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மகராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மகராஷ்டிர மாநில போக்குவரத்து ஆணையர் அவினாஷ் தக்னே கூறியதாவது, 

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 9-ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. இப்பண்டிகை காலத்தில் மும்பை மற்றும் புனேவில் இருந்து கொங்கன் பகுதிக்கு ஏராளமானோர் சென்று வருவது வழக்கமாக உள்ளது. 

இந்நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எடுத்த முடிவின்படி கொங்கன் பகுதியில் உள்ள சொந்த ஊருக்கு செல்வோருக்கு செப்டம்பர் 11 வரை வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான பாஸ்களை ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.  

மேலும் வாகனப் பதிவு எண், செல்லும் வழி, சொந்த ஊரில் தங்கப்போகும் கால அளவு உள்ளிட்ட விவரங்களை அளித்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அளித்து இலவச பாஸ்களை பெறலாம் என கூடுதல் போக்குவரத்து ஆணையர் ஜே.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து