முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செப்டம்பா் வரை நீடிப்பு : மத்திய அமைச்சர் தோமர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      இந்தியா
Thomar 2022-08-28

Source: provided

புதுடெல்லி : கொப்பரை தேங்காய்க்கான கொள்முதலை தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா்  உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் கடந்தாண்டு பொதுச் சந்தையில் கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ. 140 வரை இருந்த நிலையில் நிகழாண்டில் கிலோவிற்கு ரூ. 70 முதல் 80 ஆக சரிந்துள்ளது. 2014-ம் ஆண்டில் கிலோ ஒன்றிற்கு ரூ. 52.50 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 105.98 ஆக நிா்ணயித்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல்களை, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு ஆகியவை மத்திய அரசின் முகமைகளாக இருந்து மாவட்ட ஆட்சியகங்கள் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல்களை மேற்கொள்கிறது.  இந்த கொள்முதல் கடந்த ஜூலை 31-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஜூன் மாதமே முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 16 -ம் தேதி தமிழக அரசின் விவசாய உற்பத்தி ஆணையா் மற்றும் செயலா் சமயமூா்த்தி மத்திய அரசுக்கு இந்த கொள்முதல் காலக் கட்டத்தை நீடிக்க கோரி கடிதம் எழுதினார். 

அதில், கொரோனா தொற்றுக்கு பின்னா் தென்னை விவசாயிகளும், தேங்காய் மில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ முதல் 2800 கிலோ வரையிலான கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு ஏக்கருக்கு 216 கிலோ தான் அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறது. பொது சந்தையில் விலை கடுமையாக குறைந்துள்ளது. ஆனால் யூரியா விலையேற்றம், உற்பத்தி செலவு, அறுவடை செலவு (ஒரு தேங்காய்க்கு ரூ. 3) போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு 800 கிலோ கொப்பரையை கொள் முதல் செய்யவும் கொள் முதல் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இதைத் தொடா்ந்து, தற்போது கொள்முதல் காலத்தை நீட்டித்து அதாவது, செப்டம்பா் 30-ம் தேதி வரை தமிழகத்தில் கொப்பரை மற்றும் பந்து தேங்காயை கொள்முதல் செய்ய நாபெட், என்.சி.சி.எப் நிறுவனங்களுக்கு மத்திய வேளாண்மை துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து