முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்திற்கான உதிரிபாகங்கள் தயரிப்பு 3-வது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      இந்தியா
Rajnath 2022 08-27

Source: provided

புதுடெல்லி : மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். 

பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியத் தொழில்துறை அதிக பங்களிப்பை அளிக்கும் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். 

டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2028 வரையிலான காலக்கட்டத்தில், இந்த பொருட்களின் இறக்குமதி தடைக்கான குறிப்பிட்ட காலக்கெடுவை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து 3-வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் ஆறு வருட காலக் கெடுவின் கீழ் இந்திய தொழில்துறையினரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். டிசம்பர் 2021 மற்றும் மார்ச் 2022-ல் வெளியிடப்பட்ட இரண்டு உள்நாட்டு உற்பத்தி பட்டியல்களின் தொடர்ச்சியாக தற்போது இந்த 3-வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து