முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்கம் கொடுத்த விஜய் சேதுபதி - சகோதரி ஜெயஸ்ரீ நெகிழ்ச்சி

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022      சினிமா
Jayashree 2022-08-29

Source: provided

சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இறைவி என்ற பிரமாண்ட துணி விற்பனையகம் இயங்கி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த இறைவி விற்பனையகம் தற்போது ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை ஒட்டி நடைபெற்ற விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நல்லி சில்க்ஸ் தொடங்கி 94 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட நல்லி சில்க்ஸ் இன்று உலகம் முழுவதும் 40 கிளைகளுடன் சேவையாற்றி வருகிறது. எங்களைப் போன்றே நீங்களும் உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்' என்று வாழ்த்தினார். இறைவி நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ் பேசுகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் இருநூறு சதுர அடியில் விற்பனையகத்தை தொடங்கினோம். இன்று 18,000 சதுர அடியில் விரிவுப்படுத்தி இருக்கிறோம். இதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தது என்னுடைய சகோதரர் விஜய் சேதுபதி தான் என்றார். அதே போல், கணவர் ராஜேஷின் ஒத்துழைப்பும் என்னுடைய அம்மாவின் பங்களிப்பும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது அவர்களுக்கும் எனது நன்றி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து